எஸ்.ஐ.வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சுட்டுக் கொல்லப்பட்ட உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வில்சன் குடும்பத்தினருக்கு தம்முடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து அவருடைய குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கப்படும் எனவும்; அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசுப் பணி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் நேற்று தாம் அறிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி வில்சனின் உயரிய தியாகத்தை கருத்தில் கொண்டு அவருடைய குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரண உதவியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே