டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 19ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளில், முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி, குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 19 பேர், குரூப் 2ஏ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 19 பேர், விஏஓ தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக மூவர் என மொத்தம் 41 பேரை இதுவரை கைது செய்துள்ளது.

இந்நிலையில் குரூப் 4 தேர்வு விடைத்தாள் பண்டல்களை மாற்றுவதற்கு, டிஎன்பிஎஸ்சி ஊழியர் ஓம்காந்தனுக்கு உதவியதாக, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஓட்டுனர் மரியலி ஜோஸ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 19ந்தேதி முதல் கலந்தாய்வு மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

முறைகேடு புகார்களில் சிக்கியவர்களை நீக்கிய பின் தயாரான புதிய பட்டியலில் அடிப்படையில் இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே