கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 3ம் தேதி நடைபெறுமென அறிவிப்பு!

கூட்டுறவு சங்க தேர்தல் பிப்ரவரி 3ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1028 கூட்டுறவு சங்கங்களில் உள்ள 11,368 பதவிகளுக்கு பிப்ரவரி 3ம் தேதி தேர்தல் நடைபெறும் என கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 4ம் தேதி நடைபெறும் என்றும்; இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜனவரி 27ம் தேதி தொடங்கி மனுக்கள் மீதான பரிசீலனை 28ம் தேதி நடைபெற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வரும் 29ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே