நியூசிலாந்து தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகல்..!!

காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 தொடரில் விளையாட வில்லை.

Rohit Sharma withdraws from New Zealand series

அவர் காயம் காரணமாக விளையாடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும், ஐந்தாவது டி20 போட்டியில் அவர் களமிறங்கி 60 ரன்களை குவித்தார்.

Rohit Sharma withdraws from New Zealand series

இந்த நிலையில், காலில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ரோஹித் சர்மா எஞ்சியுள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் டி20 உலகக்கோப்பை மற்றும் ஐபிஎல் ஆகியவற்றை கருத்தில்கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே