ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தல்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா அதிரடியாக சதமடித்தார். 

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாக இருந்தது.

தொடக்க ஆட்டக்காரர் அகர்வால் 10 ரன்னிலும், புஜாரா ரன் எதுவும் இல்லாமலும் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் கோலியும், நோர்ட்ஜே வீசிய பந்தில் 12 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.

இந்த சூழ்நிலையில், 4ஆவது விக்கெட்டுக்கு ரோஹித்தும், அஜிங்கியா ரஹானேவும் கைகோர்த்தனர்.

இருவரும் பொறுப்பை உணர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியின் ஸ்கோரும் அதிகரிக்க தொடங்கியது.

இருவரும் தமது பங்குக்கு அரைசதம் அடித்தனர். பின்னர் சிறப்பாக விளையாடிய ரோஹித் 130 பந்துகளில் சதம் அடித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே