தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா கவர்னரின் பரிசீலனையில் உள்ளதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு அளிக்கும் மசோதா சட்டசபையில் கடந்த செப்டம்பர் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, அந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுவரை இந்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து தகவல் அளிக்கும் உரிமை சட்டத்தின் கீழ் கல்வியாளர் கஜேந்திர பிரின்ஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு கவர்னர் மாளிகை அளித்த பதிலில், ‘நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா கவர்னரின் பரிசீலனையில் உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.