இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 781 ஆக அதிகரிப்பு..!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,195 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு 781 ஆக அதிகரித்துள்ளது. 302 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 9,195.

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,42,51,292.

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 7,347.

இதுவரை குணமடைந்தோர்: 3,41,95,060.

நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.40% என்றளவில் உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 302.

கரோனா மொத்த உயிரிழப்புகள்: 4,80,592

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை:77,002.

இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர்: 143.15 கோடி.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே