#BREAKING : ஈரோடு பெருந்துறை மருத்துவக் கல்லூரியின் கட்டணம் குறைப்பு..!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மாணவர்களிடம் அரசு கட்டணம் வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பெருந்துறையில் போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வந்த மருத்துவ கல்லூரி 2018-ல் சுகாதாரத்துறை கீழ் வந்தது. சுகாதாரத்துறை கீழ் அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவிக்கப்பட்ட பின்பும் பழைய கட்டணமே வசூலிக்கப்படும் வந்தது.

அரசு மருத்துவக் கல்லூரிக்குரிய மருத்துவ கட்டணங்களை மட்டுமே வசூலிக்க கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டுக் கட்டணமாக 13 ஆயிரத்து 610 என நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை தொடர்ந்து ஈரோடு பெருந்துறை கல்லூரிக்கும் அரசு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே