விமர்சனம்: சோனியின் இந்த வயர்லெஸ் அல்லது நெக்பேண்ட் ஸ்டைல் ஹெட்செட்டை நம்பி வாங்கலாமா?

நீங்கள் எந்நேரமும் ஹெட்போன் அல்லது இயர்போன் பயன்படுத்துபவரா ? உங்களுக்கு ஒரு நற்செய்தி. நீங்கள் இதுவரை பயன்படுத்தாத ஒரு அருமையான டிசைன் மற்றும் ஸ்டைல் இயர்போன் நல்ல விலையில் இப்போது கிடைக்கிறது. சோனியின் தற்போதைய புதிய வெளியீடு WI-1000XM2, வகை இயர்போன். இது கழுத்து பட்டி வடிவத்தில் வரும் இயர்போன் ஆகும். இதன் அறிமுக விலை ரூ .21,990. அதிகமான சத்தங்களை ரத்து செய்யும் தொழில்நுட்ப்பதுடன் உருவானதால் இந்த விலை. இதனை நாங்கள் சில நாட்கள் பயன்படுத்தி அதன் தரத்தை சோதித்தோம்.
சோனி WI-1000XM2 – டிசைன்.

இந்த வகை ஹெட்போனுக்கான கழுத்து பட்டியை சற்று அடர்த்தியாக வடிவமைத்திருக்கிறது சோனி நிறுவனம். இது சிலிக்கானால் செய்யப்பட்டது. சிலிக்கானால் தயாரிக்கப்பட்டது என்ற காரணத்தினால் இதனை மடக்கி வைத்துக்கொள்வது எளிதாக உள்ளது. இந்த டிசைனில் குறிப்பாக சொல்ல வேண்டிய ஒன்று ஹெட்போனின் எடை. வெறும் 58கிராம் எடை மட்டுமே கொண்ட இந்த ஹெட்டிபொன் கையாள மிகவும் எளிதாக உள்ளது. தொடர்ந்து பல மணிநேரம் இதனை பயன்படுத்தினாலும் நாம் சோர்வடைவதில்லை. இந்த இயர்போனை வைத்துக் கொள்ள பெட்டியுடன் ஒரு பவுச் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை எடுத்துச் செல்வதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை.
சோனி நிறுவனம் இந்த இயர்போனில் 6 வெவ்வேறு வகை காது முனைகளை வடிவமைத்துள்ளது. பயனாளர்கள் தங்கள் காதுகளுக்கு ஏற்ற காது முனைகளை தேர்ந்தெடுக்க இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு ப்ராண்ட் தனது பயனாளர்களின் வசதிக்காக ஒரு படி அதிகம் யோசித்து இந்த அம்சத்தைக் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. சோனி ஹெட்ப்போன் ஆப் பயன்படுத்தி, காது வடிவத்தைப் பற்றி பகுப்பாய்வு செய்து, சரியான காது முனையை கண்டுபிடிக்கலாம். இது ஒரு கடினமான செயல்பாடு என்பது மறுப்பதற்கில்லை. இதனால் நேரம் மற்றும் முயற்சி செலவாகிறது, என்றாலும் தனது பயனாளர்கள் சௌகரியத்திற்காக ஒரு ப்ராண்ட் இதனை உருவாக்கியது ஒரு நல்ல விஷயம்.
பட்டன் பற்றி குறிப்பிடும்போது, இதில் உள்ள பவர் பட்டன் , இயர்போனின் இடது பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இன் – லைன் கண்ட்ரோல் , வால்யூம் கண்ட்ரோல், வாய்ஸ் அஸ்சிஸ்ட் பட்டன் மற்றும் ஒரு மல்டி-பர்பஸ் பட்டன் ஆகியவை அமைத்துள்ளது. இது அழைப்புகளை இணைக்கவும், ஆடியோ டிராக்குகளை மாற்றவும் மற்ற விஷயங்கள் செய்யவும் உதவுகிறது.

WI-1000XM2 இயர்போன் ஒட்டுமொத்த வடிவமைப்பு பொறுத்தவரை நமக்கு திருப்தியை அளிக்கிறது. சிலிக்கான் காது முனையை தேர்ந்தெடுத்த சோனி நிறுவனத்தின் கூர்மையான தேர்வுமுறை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
சோனி WI-1000XM2 – செயல்திறன்

சோனியின் முதல் கழுத்து பட்டை இயர்போன் இதுவல்ல. கழுத்துபட்டை வகை இயர்போன் சோனியில் இதற்கு முன்பே தயாரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் சத்தத்தை ரத்து செய்யும் நுட்பத்தைக் கொண்ட முதல் கழுத்து பட்டி வகை இயர்போன் இதுவாகும். ஒயர்லெஸ் ஹெட்போனில் ANC மற்றும் சோனியில் எந்த வேறுபாடும் இல்லை என்பது அனைவரின் கருத்து. சோனி ஒரு பிரத்யேக HD சத்தம் ரத்து செய்யும் QN1 ப்ரோஸெஸ்ஸர் பயன்படுத்தியுள்ளது. இது உங்களைச் சுற்றியுள்ள எல்லா ஒலிகளையும் தடுக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் ANC இன்-லைன் கண்ட்ரோலில் ஒரு பட்டன் வைத்திருப்பதன் மூலம் இந்த செயலை எளிதாக்குகிறது. ANC இயர்போனை பரபரப்பான சந்தைகளில், டெல்லி மெட்ரோவில், மேலும் விமானத்தில் கூட பயன்படுத்தி அதன் முழு பலனைப் பெற முடியும்.

ஒலி வெளியீட்டைக் குறிப்பிடும்போது , இதன் தொடக்க பயன்பாட்டில் சிறப்பாக சொல்ல எதுவுமில்லை. தட்டையான ஒலியுடன், குரலும் தெளிவாக இல்லாமல் , செயல்திறன் மிகவும் சுமாராக இருந்தது. ஆனால் சோனி ஹெட்போன் ஆப் பயன்படுத்தியவுடன் இதன் செய்லதிறன் உடனடியாக மாறியது. நிச்சயம் சோனி ஹெட்போன் ஆப்பை சார்ந்து இருப்பது அவசியம். தனிப்பயனாக்கம் கொண்ட ஈக்குவலைசர் மற்றும் ப்ரீ செட் மூலம் ஒலி வெளியீடு முற்றிலும் வேறு அளவில் சிறப்பாக உள்ளது. ஹெட்போனில் பல்வேறு ஜானர் முயற்சித்தபோதும் போதுமான ஒலி வெளியீடு உண்டாகிறது.
சிறப்பான ஒலி வெளியீட்டிற்காக சோனி HD என்னும் ஹைபிரிட் ட்ரைவர் முறையை பயன்படுத்தியுள்ளது. இதில் ஒரு 9-மிமீ டைனமிக் டிரைவர் உள்ளது. இது ஆழமான பாஸ் நிலைகள் மற்றும் தெளிவான ஒலி மிட்களை வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளது. இயற்கையான உயர் டோன்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சமச்சீர் ஆர்மேச்சர் இயக்கி உள்ளது.
இந்த இயர்போனில் அழைப்புகள் திறன் சிறப்பாக உள்ளது. அழைப்பின் மறுமுனையில் இருப்பவர்களுக்கு அனாவசிய எதிரொலிகள் எதுவும் கேட்பதில்லை. எந்த ஒரு புகாரும் இது குறித்து இல்லை. கடந்த ஆண்டுகளில் சோனி இயர்போன் அழைப்பை கையாளுவதில் சிறப்பான சேவையைத் தந்துவருகிறது. இதற்கு WI-1000XM2 ஒரு சாட்சியாகும்.
பேட்டரி நிலைகள் சிறப்பாக இருக்கிறது மற்றும் ஒரு முறை சார்ஜ் செய்வதால் ஹெட்போன் 10 மணிநேரம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கிறது. மேலும் சோனியில் துரித சார்ஜ் நுட்பம் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இதில் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்வதால் 80 நிமிடங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

சோனி WI-1000XM2 – முடிவுரை

இதன் விலை ரூ.21,990/- என்பது அதிகமாக இருந்தாலும் சத்த ரத்து தொழில்நுட்பம் என்ற இன்றியமையாத அம்சம் இதில் உள்ளது. இது சிறப்பாக வேலை செய்கிறது. ஒலி வெளியீடு சிறப்பாக உள்ளது. பேட்டரி அளவுகளும் புகாரும் அளிக்கும் விதத்தில் இல்லை. அதுவும் நன்றாகவே உள்ளது. கழுத்து பட்டி வடிவ இயர்போன் தான் உங்கள் விருப்பம் என்றால் நீங்கள் நிச்சயம் இதனைத் தேர்வு செய்யலாம். என்ன இருந்தாலும் இதனை வாங்குவதற்கு விலை ஒரு தடையாகவே இருக்கும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே