#LIVE : #BREAKING | நவம்பர் மாதம் இறுதி வரை இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் – பிரதமர் மோடி!

டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றுகிறார். பொது முடக்கம், சீன செயலிகள் மீதான தடை, எல்லை பதற்றம் பற்றி அவர் பேச உள்ளதாக கூறப்படுகிறது.

இப்போதைய சூழலில் மக்கள் காய்ச்சல், சளி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பொது முடக்கத்தை பல இடங்களில் மக்கள் சரியாக கடைபிடிக்கவில்லை.

இந்தியா லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளது.

சரியான நேரத்தில் பொது முடக்கம் கொண்டுவரப்பட்டதால் பலரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

மழைக்காலம் தொடங்க உள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

இப்போது செய்யும் சிறு தவறுக்காக மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடலாம்.

பொது முடக்கத்தின் ஆரம்பகட்டத்தில் மக்கள் அஜாகரதையாக செயல்பட்டதை காண முடிந்தது.

நாட்டில் உள்ள ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக் கூடாது.

ஏழைகளுக்காக 1.75 லட்சம் கோடி ரூபாய்க்கு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் குறைவாக உள்ளது; இரண்டாம் கட்ட தளர்வுக்குள் தேசம் நுழைந்துள்ளது – பிரதமர் மோடி உரை!

இந்த தளர்வு நேரத்தில் சிறிய தவறுகள் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்; விதிகளை மீறுவோரை அதிகம் எச்சரிக்க வேண்டியது அவசியமாகிறது – பிரதமர் மோடி உரை!

ஏழை மக்கள் வங்கி கணக்கில் ரூ.31,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது; பிரதமர் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.50,000 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது – பிரதமர் மோடி உரை!

அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன – பிரதமர் மோடி

ஏழைகள் உணவின்றி தவிக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது; நாட்டில் 80 கோடி மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன – பிரதமர் மோடி உரை!

ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.31,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது

விவசாயிகளுக்கும், வரிசெலுத்துவோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்; பருவநிலை காலத்தில் விவசாயத்திற்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன – பிரதமர் மோடி உரை!

பிரதமர் கரீப் கல்யாண் திட்டம் நவம்பர் வரை நீட்டிப்பு; அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேசன் பொருட்கள் நவம்பர் வரை இலவசமாக வழங்கப்படும் – பிரதமர் மோடி

ஏழைகளின் வங்கி கணக்கில் ரூ.31,000 கோடி செலுத்தப்பட்டுள்ளது – பிரதமர் மோடி

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பலன் தந்துள்ளது சரியான நேரத்தில் ஊரடங்கு அறிவித்ததால் லட்சக்கணக்கானோர் காப்பாற்றப்பட்டனர் – பிரதமர் மோடி உரை!

முகக் கவசம் அணியாமல் இருந்ததால் ஒரு நாட்டின் பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பிரதமர் முதல் சாமானியர்கள் வரை விதிமுறைகள் ஒன்றுதான் என்றும் மோடி கூறியுள்ளார்.

இன்று, ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்களை அரசாங்கத்தால் வழங்க முடிகிறது என்றால், விவசாயிகள் மற்றும் நேர்மையான வரி செலுத்துவோர் என இரு பிரிவினருக்கு தான் இந்த பெருமை சேரும்; என் இதயப்பூர்வ நன்றியை இவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் – பிரதமர் மோடி!

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே