ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்..!!

விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.

கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் இன்று அவர் அக்கட்சியில் இணைந்தார். மேலும் கட்சியில் அவருக்கு கட்சியின் தலைமை அலுவலக பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப செயலாளர் பொறுப்பிலிருந்து கடந்த 1995 ஆம் ஆண்டு சந்தோஷ் பாபு ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

பதவியில் இருந்தபோது பாரத் நெட்டில் ஊழல் நடப்பதற்கான வாய்ப்பு இருந்ததால் அதற்கு எதிராக பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாக பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், ‘கட்சிக்கு நல்லவர்கள் வர வேண்டும் என்பதற்கு உதாரணமாக ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு சரியான நேரத்தில் வந்துள்ளார்.

அவர் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்ததற்கு பாராட்டுகிறேன்.

இதேபோன்று கட்சிக்கு இனிமேல் வரும் நல்லவர்களை வரவேற்கும் பொறுப்பு அவருடையதாக இருக்கும்.

பல்வேறு துறைகளில் பணியாற்றிய அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே