50 வருடம் கழித்து பள்ளி நண்பர்களை சந்தித்த மு.க ஸ்டாலின்..

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேத்துப்பட்டில் தாம் படித்த பள்ளிக்குச் சென்று நண்பர்களை சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அங்குள்ள எம்.சி.சி மேல்நிலைப் பள்ளியில் 1970ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஸ்டாலின், தமது பள்ளிக்கால நண்பர்களை சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

அவர்களோடு தேநீர் அருந்தியும் தாம் படித்த வகுப்பறையில் சென்று அமர்ந்தும் உரையாடி மகிழ்ந்தார்.

தாம் விளையாடி மகிழ்ந்த மைதானம் உள்பட பள்ளி வளாகம் முழுமையும் நண்பர்களோடு சுற்றி வந்தார் ஸ்டாலின்.

தேர்தல் பரபரப்புகளுக்கிடையே நடைபெற்ற இந்த சந்திப்பு, மு.க. ஸ்டாலினின் நண்பர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே