அசாம் மாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

சென்னையில் மீட்கப்பட்ட அசாம் மாநில குழந்தை தொழிலாளர்கள் மீண்டும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

சென்னையில் பல்வேறு இடங்களில் குழந்தை தொழிலாளர்களாக இருப்பவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இப்படி மீட்கப்பட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 10 குழந்தை தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு ரயில் மூலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயந்தி அனுப்பி வைத்தார்.

கடந்த மாதம் மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 61 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டார்கள்.

இதுவரை பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே