குழாயில் வீழ்ந்த குழந்தையை மீட்க நிலமிறங்கும் வீரர்களை வாழ்த்திக் கண்ணீரோடு கைதட்டுகிறேன் – வைரமுத்து

திருச்சி மாவட்டம் , மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் இரண்டரை வயது குழந்தை சுர்ஜித் வில்சன், பராமரிப்பின்றி திறந்தவெளியில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்தது. தகவலறிந்த மணப்பாறை தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆழ்துளை கிணற்றுக்கு அருகிலேயே மற்றொரு துளை அமைத்து வருகிறார்கள்.அந்த குழியின் வழியே இறங்கி குழந்தையை மீட்கும் வீரர்களை வாழ்த்துவதாக கவிஞர் வைரமுத்து டிவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 401 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே