#BREAKING : தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா – பீலா ராஜேஷ் பேட்டி

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 69 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ‘தற்போது வீட்டுக் கணக்காணிப்பில் 66,000 பேர் இருக்கின்றனர். அரசுக் கண்காணிப்பில் 250 பேர் உள்ளனர்.

சென்னை, ஈரோட்டில் புதிதாக இரண்டு கொரோனா சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 15 லட்சம் வீடுகள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன. இதுவரையில், 5,305 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையில் 690 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது.

இதுவரையில், 19 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 11 பேர் கொரோனா குணமாகி வீடுதிரும்பியுள்ளனர்.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 149-ஆக உயர்ந்துள்ளது.

திருப்பூரில் 13, மதுரையில் 5, தூத்துக்குடியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இறப்புகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள ரேபிட் டெஸ்ட் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் சிகிச்சையில் இருந்த 64 வயது பெண்மணி உயிரிழந்துள்ளார். ஏற்கெனவே அவர் உடல்பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.

டெல்லி சென்று திரும்பியவர்களில் 961 பேருக்கு கொரோனா தொற்று இல்லை’ என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே