மீண்டும் வருகிறார் பும்ரா!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விரைவில் களமிறங்குவார் என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார்.

யாக்கர் மன்னன் என்றழைக்கப்படும் பும்ரா பவுலர்களுக்கான ஐசிசி ஒரு நாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளில் 62 விக்கெட்களை சாய்த்துள்ளார்.

அந்நிய மண்ணில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருப்பவர் பும்ரா.

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு பின் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் அவர் பங்கேற்கவில்லை.

மேலும் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் பும்ரா அணியில் இடம்பெறவில்லை.

பும்ராவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் சிறிய காயம் தான் என்பதால் எந்தவிதமாக அறுவை சிகிச்சையும் அவர் மேற்கொள்ளவில்லை.

இது தொடர்பாக பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் கூறுகையில், “காயத்திலிருந்து பும்ரா மீண்டு வருவதற்கு சில வாரங்கள் அல்லது மாதங்கள் தேவைப்படும். விரைவில் அவர் குணமாகி அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே