ரெப்போ வட்டி விகிதம் 4% ஆக தொடரும் – ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் அறிவிப்பு..!!

ரெபோ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 4 சதவீதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

இதற்கான முடிவு சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குறித்த கூட்டத்தில் ஒரு மனதாக எடுக்கப்பட்டது.

இந்த குழுவின் கடந்த 6 ஆலோசனை கூட்டங்களில், வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. கடைசியாக கடந்த 2020 மே 22ம் தேதி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல் ரிவர்ஸ் ரெபோ வட்டி விகிதமும் 3.5 சதவீதமாகவே தொடரும் என சக்திகாந்த தாஸ் அறிவித்தார். பணவீக்கத்தை குறிப்பிட்ட இலக்கிலேயே வைக்கவும், பொருளாதாள வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும், வட்டி விகிதத்தை மாற்றாமல் இருக்கவும், பழைய வட்டி விகிதம் தொடரவும் நிதிக்கொள்கை கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது என தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக, இந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 9.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. முன்னதாக, 10.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே