18 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி காஞ்சிபுரம் ஆட்சியராக மாற்றம்

தருமபுரி ஆட்சியராக இருந்த மலர்விழி கரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்

தருமபுரி ஆட்சியராக கார்த்திகா நியமனம்

கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்து அன்பழகன் மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அரவிந்தன் நியமனம்

மதுரை ஆட்சியராக இருந்த வினய் சேலம் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் இயக்குநராக மாற்றம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக வெங்கட பிரியா நியமனம்

செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர், பதிவு துறை ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே