தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்..!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக கடந்த 16ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அன்று முதல் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் நலன் கருதி மாநிலத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதன்படி பொதுமக்கள் முகாம் நடக்கும் இடங்களுக்கு சென்று தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என அறிந்து கொள்ளலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்றவற்றிற்கு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு பெயர் சேர்க்க விரும்புவோர் முகவரி சான்றாக ஓட்டுநர் உரிமம், வங்கி புத்தகம், தபால் அலுவலக கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, வருமானவரி ஒப்படைப்பு சான்றிதழ் ஏதேனும் ஒன்றை நகலாக வழங்கலாம். 

மேலும், பிறப்பு சான்றிதழ் 5, 8, 10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை பிறந்த ஆவணமாக அளிக்கலாம்.

வரும் 2021 ஜனவரி 18 வயது பூர்த்தியாவோரும் புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே