பெண் ஊழியருடன் தொடர்பு : பறிபோன மெக்டொனால்ட் சிஇஓ பதவி

நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியருடன் ஏற்பட்ட தொடர்பால் புகழ்பெற்ற துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட் தலைமை செயல் அதிகாரியின் பதவி பறி போகி இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த மெக்டொனால்ட்-இன் தலைமை செயல் அதிகாரி Steve Easterbrook அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.

மேலாளர் பதவிக்கு மேற்பட்ட உயர்பதவி வகிப்பவர்கள் நிறுவனத்தின் ஊழியர் உடன் காதல், சேர்ந்து வசிப்பது, திருமணம் செய்வது போன்ற எந்த தொடர்பும் வைத்திருக்க கூடாது என்பது அந்த நிறுவனம் விதிமுறை.

அந்த விதிமுறைகளை மீறும் விதமாக பெண் ஊழியர் ஒருவருடன் Steve Easterbrook தொடர்பு இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில் விதிமுறைப்படி Steve Easterbrook பதவி விலகி இருப்பதாக மெக்டொனால்ட் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே