ரெட்மி, சாம்சங் டிவிகளுக்கு வேட்டு; ஒன்பிளஸ் U1, Y1 டிவி விற்பனை ஆரம்பம்!

ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து புதிதாக அறிவிக்கப்பட்ட யு சீரிஸ் மற்றும் ஒய் சீரிஸ் டிவி மாடல்கள் இன்று மதியம் 12 மணிக்கு (நண்பகல்) அமேசான் வழியாக விற்பனைக்கு வரவுள்ளன. இன்று நடக்கும் விற்பனை இந்த இரண்டு டிவி தொடர்களின் முதல் விற்பனையாக இருக்கும்.
இன்று ஒன்பிளஸ் டிவி யு1 மற்றும் ஒன்பிளஸ் டிவி ஒய்1 என்கிற தொடரின் கீழ் அறிமுகமான 3 ஸ்மார்ட் டிவிகளுமே விற்பனைக்கு வருகிறது.

ஒன்பிளஸ் டிவி யு1 தொடரின் கீழ் ஒரே ஒரு டிவி அறிமுகமாகி உள்ளது. அது ஒன்பிளஸ் டிவி 55 யூ1 மாடல் ஆகும். இது இந்தியாவில் ரூ.49,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.
மறுகையில் உள்ள ஒன்பிளஸ் டிவி ஒய் தொடரின் கீழ் இரண்டு ஸ்மார்ட் டிவிகள் அறிமுகமாகி உள்ளன. அவைகள் ஒன்பிளஸ் டிவி 43 ஒய்1 மற்றும் ஒன்பிளஸ் டிவி 32 ஒய்1 ஆகும். இவைகள் இந்தியாவில் முறையே ரூ.22,999 க்கும் மற்றும் ரூ.12,999 க்கும் அறிமுகமாகி உள்ளது.

ஒன்பிளஸ் டிவி 55 யூ1 ஸ்மார்ட் டிவியின் அம்சங்கள்:

  • 55 இன்ச் 4 கே டிவி டிஸ்ப்ளே
  • 6.9 மிமீ தடிமன் மற்றும் பின்புற பேனலில் கார்பன் ஃபைபர்
  • 93 சதவீதம் டிசிஐ-பி 3 கலர் கேமட்
  • 95 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்
    -இதன் போர்ட்கள் பின் பேனலில் மறைக்கப்பட்டுள்ளன
  • புதிய காமா எஞ்சின்
  • டால்பி விஷன் ஆதரவு
  • 30W ஸ்பீக்கர்களுடன் இரண்டு முழு அளவிலான ஸ்பீக்கர்களையும், இரண்டு ட்வீட்டர்களையும் 90 டிகிரி நிலையில் கொண்டுள்ளது
  • ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ்
  • ஒன்பிளஸ் கனெக்ட் போன்ற முன்பே ஏற்றப்பட்ட பயன்பாடுகள், இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் டிவியுடன் இணைக்க அனுமதிக்கும் மற்றும் ஸ்மார்ட் டிவியைக் கட்டுப்படுத்த முடியும்
  • ஆக்ஸிஜன் ப்ளே
  • டேட்டாபயன்பாட்டைக் கட்டுப்படுத்த உதவும் டேட்டா சேவர் பிளஸ் மோட்
  • கிட்ஸ் மோட்
  • பேரண்ட் டைமர்கள்
  • ஆப் பெர்மிஷன்ஸ்
  • கண் பாதுகாப்பு மற்றும் பல.
    ஒன்பிளஸ் டிவி ஒய்-சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளின் அம்சங்கள்:
  • பெஸல்லெஸ் வடிவமைப்பு
  • இது கண்ணாடி தாள் போல் இருப்பதாக ஒன்பிளஸ் கூறுகிறது
  • 43 இன்ச் புல் எச்டி டிஸ்ப்ளே
  • அதில் 93 சதவீதம் டிசிஐ-பி 3 வண்ண வரம்பு
  • 32 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
  • அதில் 93 சதவீதம் டிசிஐ-பி 3 வண்ண வரம்பு
  • இந்த ஸ்மார்ட் டிவி.களும் காமா எஞ்சினுடன் வருகின்றன
  • டைனமிக் கான்ட்ராஸ்ட்
  • மேம்பட்ட பட தரம் மற்றும் பலவற்றை வழங்குகிறது.
  • 20W ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் டால்பி ஆடியோவுடன் அதிவேக ஒலி அனுபவம்
  • ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ்
  • கூகுள் அசிஸ்டென்ட்
  • ஆக்ஸிஜன் பிளே
  • உள்ளமைக்கப்பட்ட Chromecast ஆதரவு
  • ஒன்பிளஸ் கனெக்ட் மற்றும் பல.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே