வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படும் நிலையில் அதன் சிறப்பம்சங்கள்

வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படும் நிலையில் அதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம்.

2018-ஆம் ஆண்டு வரை வேதியியல் துறைக்கான நோபல் பரிசு மொத்தம் 110 முறை வழங்கப்பட்டுள்ளது.

1901 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த பரிசு, போர் மற்றும் பிற காரணங்களால் எட்டுமுறை வழங்கப்படவில்லை.

வேதியியலுக்கான நோபல் பரிசை அறுபத்து மூன்று முறை தனி நபர் ஒருவரே பெற்றிருக்கிறார். 23 முறை இருவருக்கும், 24 முறை மூவருக்கும் இந்த பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 181 பேர் வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்று உள்ளனர்.

ஃபிரெட்ரிக் சேங்கர் என்ற ஒரே ஒரு விஞ்ஞானி மட்டும் இந்த பரிசை இரண்டு முறை பெற்று இருக்கிறார்.

வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்களின் சராசரி வயது 58.

1935 ஆம் ஆண்டு கதிரியக்கப் பொருட்கள் பற்றிய ஆய்வுக்காக 35 வயதான ஃபிரெட்ரிக் ஜோலியட் என்பவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர்தான் குறைந்த வயதில் வேதியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்.

இவருடன் நோபல் பரிசை பகிர்ந்து கொண்டவர், இவரது மனைவி ஐரீன் ஜோலியட். இவர் புகழ்பெற்ற விஞ்ஞானி மேரி கியூரியின் மூத்த மகள்.

வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றவர்களில் அதிக வயதானவர் ஜான் பி ஃபென்.

2002 ஆம் ஆண்டில் நோபல் பரிசை பெறும் போது ஃபென்னின் வயது 85.

வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றவர்களில் 5 பேர் மட்டுமே பெண்கள். அவர்களில் மேரி கியூரியும் அவரது மகள் ஐரினும் அடங்குவர்.

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் இருந்த காலத்தில் நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட இருவர் பரிசை பெறுவதற்கு நாஜி அரசு தடை விதித்தது. அந்த இரண்டு பரிசுகளுமே வேதியியல் துறைக்காக வழங்கப்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *