என் வீட்டை மருத்துவமனையாக மாற்ற தயார் !! – நடிகர் கமல்

மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களைக் கொண்டு என் வீட்டை தற்காலிகமாக மருத்துவமனையாக்கி எளிய மக்களுக்கு உதவத் தயார் என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் இந்தக் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டு 19 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.

இதுவே தமிழகத்தில் கொரோனாவால் நிகழும் முதல் மரணமாகும்.

வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க வரும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைத் தடுக்க அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தனது வீட்டை தற்காலிக மருத்துவ மய்யமாக மாற்ற தயார் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் அவர், “இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி,மக்களுக்கு உதவ நினைக்கிறேன்.அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே