கொரோனா தடுப்பு தொடர்பாக தமிழக மக்களுடன் முதல்வர் பழனிசாமி உரை நிகழ்த்தி வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
தமிழக அரசு இதனை கட்டுப்படுத்துவதற்கு நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவை அமல்படுத்தியது.
இதனிடையே நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருவதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.
இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார்.
கொரோனாவுக்கு எதிராக விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு… என மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, தமிழக முதல்வராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன். 21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல; உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு எனவும் கூறினார்.