வேளச்சேரியில் துவங்கியது மறுவாக்கு பதிவு..!!

வேளச்சேரி தொகுதி 92-வது வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு காலை 7மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிளுக்கும் ஒரேகட்டமாக நடந்து முடிந்தது. தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிக்கு முடிவடைந்த நிலையில் வாக்கு எந்திரங்கள் அந்த வாக்கு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சூழலில் வேளச்சேரி தொகுதியில் 2 வாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரு வி.வி.பாட் எந்திரமும் மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் 92வது பூத்தில் 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரத்தில் 15வாக்குகள் பதிவாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனால் வேளச்சேரி 92வது எண் கொண்ட பூத்தில் மீண்டும் மறுவாக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது.

அதன்படி அங்கு மீண்டும் தேர்தல் பரப்புரை நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் மறு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 92-வது வாக்குச்சாவடியில் 548 ஆண் வாக்காளர்கள் உள்ள நிலையில் காலை முதலே வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே