நடிகர் விவேக் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்..!!

நடிகர் விவேக் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் எக்மோ சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது .

அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், அரசியல் பிரபலங்களும் இரங்கல் கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “சின்ன கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது, சிவாஜி படப் பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். 

அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

சிவாஜி திரைப்படம் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இப்படத்தில் மணிவண்ணன், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

இதில் விவேக் ரஜினியின் தாய்மாமா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விவேக் – ரஜினியின் காம்போ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே