இந்தியாவில் 3-வது நாளாக 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1341 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட அறிக்கையில்:

கடந்த 24 மணி நேரத்தில் நாடுமுழுவதும் புதிதாக 2,34,692 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரு நாளில் 1,23,354 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதுவரை 1,26,71,220 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 16,79,740 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நேற்று ஒரே நாளில்1,341 பேர் பலியாகினர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,75,649 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 11,99,37,641 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 60,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 281 பேர் பலியாகியுள்ளனர்.

முன்னதாக மாநிலம் முழுவதும் ஊரடங்குக்கு நிகரான தடை உத்தரவுகளை அடுத்த 15 நாட்களுக்கு அமல்படுத்தி முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டார்.

மகாராஷ்டிராவை அடுத்து கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்தராவில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.

இதற்கிடையில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று கரோனா நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.அமைச்சர் மணிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்திரா ஜெயின் உடன் உயர் அதிகாரிகள் பலரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே