வட்டி விகிதம் 4.4 சதவீதமாக குறைப்பு : ரிசர்வ் வங்கி ஆளுநர்

வங்கிகளுக்கான ரெப்போ வட்டிவிகிதம் 5.15 சதவீத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சக்திகாந்ததாஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து கவனித்து வருவதாக கூறினார்.

அப்போது அவர் வங்கிகளுக்கான ரெப்போ வட்டிவிகிதம் 5.15 சதவீத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் ரிவர்ஸ் ரெப்போ 4.9% இருந்து 4%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் உலக அளவிலான பொருளாதார வளர்ச்சி 20 ஆண்டுகள் இல்லாத அளவு சரிவு என கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீடு மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறையவும், வாடிக்கையாளர்களின் மாதந்திர தவணை குறைய வாய்ப்புள்ளது.

மேலும் தொழில் நிறுவனங்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏற்கெனவே வங்கிகள் கொடுத்த கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க இயலும் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே