கந்தசஷ்டி விவகாரம் : முக்கிய குற்றவாளி சுரேந்தரை 30ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு!

கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சனம் செய்த கறுப்பர் கூட்டம் சுரேந்திரனை 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த சுரேந்திரன் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

இதையடுத்து, புதுச்சேரி போலீசார் சுரேந்திரனை ஒப்படைத்த நிலையில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.

அப்போது எழும்பூர் நீதிமன்றம் வருகின்ற 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே