#BIG BREAKING : 3 மாதங்களுக்கு EMI கட்ட தேவையில்லை – ரிசர்வ் வங்கி

கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தொழில்துறையினருக்கு மாத தவணை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சக்திகாந்ததாஸ் டெல்லியில் செய்தியாளர்களை சந்திதார்.

அப்போது அவர் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து கவனித்துவருவதாக கூறினார்.

இந்த சந்திப்பின் போது அவர் பல சலுகைகளை மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளார்.

அப்போது பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.

அப்போது அவர் வங்கிகளுக்கான ரெப்போ வட்டிவிகிதம் 5.15 சதவீத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் ரிவர்ஸ் ரெப்போ 4.9% இருந்து 4%ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் தொழில்துறையினருக்கு மூன்று மாதங்கள் EMI ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் 3 மாத தவணைக்கான வட்டியையும் ரிசர்வ் வங்கி தள்ளி வைத்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால் , வாடிக்கையாளர்களின் மாத தவணைகளும் குறையும்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் வங்கிகளின் அமைப்பு பாதுகாப்பாகவே உள்ளது.

தனியார் வங்கிகளிலும் முதலீடுகள் பாதுகாப்பாகவே உள்ளன.

உடனடியாக வங்கிகளில் இருக்கும் பணத்தை எடுத்து விட வேண்டும் என்று பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

கடன் செலுத்தவில்லை என்பதற்காக திவால் நடவடிக்கை கூடாது மற்றும் சிபெல் மதிப்பெண்ணை குறைக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே