பெரியபட்டினம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் அமைக்கப்பட்ட கல்வெட்டு, பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக அகற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து அலுவலக கட்டிடத்தில் ஒரு குறிப்பிட்ட
மதத்தின் வாசகங்களுடன் கூடிய கல்வெட்டு அலுவலக முகப்பில் பொறிக்கப்பட்டிருந்தது.
இந்த புதிய கட்டிடத்தை ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ்கனி நேற்று காலை திறந்துவைப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கல்வெட்டில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் குறித்து பெரும்

சர்ச்சை கிளம்பியது. இதனையடுத்து, பெரியபட்டினம் பஞ்சாயத்து அலுவலர்கள் உடனடியாக இந்த கல்வெட்டை அகற்றினர்.
இதனால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதனிடையே, புதிய கட்டிட அலுவலக திறப்பு நிகழ்ச்சிக்கு, எம்.பி நவாஸ்கனி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.