CAA-க்கு எதிரான பேரணி : திமுக, கூட்டணி கட்சிகளின் சார்பில் பேரணி – தலைவர்கள் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக தலைமையில் நடைபெறும் பேரணி தொடங்கியது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல பகுதிகளில் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினை சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று காலை முதலே, திமுக தலைமையில் நடைபெறும் பேரணியில் பங்கேற்க ப.சிதம்பரம், வைகோ, திருமாவளவன், கனிமொழி, ஜவாஹிருல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வருகை புரிந்தனர்.

சுமார் 10.30 மணி அளவில் பேரணி தொடங்கும் இடத்திற்கு வந்த ஸ்டாலினை தோழமை கட்சித் தலைவர்கள் வரவேற்றனர். அதனை அடுத்து பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பேரணியில் கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், இஸ்லாமிய அமைப்பினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டடுள்ளதால் எத்திராஜ் சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கர்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 15,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் உள்ளிட்டவை வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்த பேரணி எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகையில் தொடங்கி, ராஜரத்தினம் மைதானத்தில் அரசியல் கட்சி தலைவர்களின் உரையுடன் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே