தேமுதிக-வுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி தரப்படுமா? முதல்வர் பழனிசாமி பதில்

தேமுதிகவுக்கு எம்பி பதவி கொடுக்கப்படுமா? என்பது குறித்து கட்சித்தலைமையே முடிவெடுக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

திருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டும் பணியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்பிஆர் விவகாரத்தில் தங்கள் கருத்தை முன்பே தெளிவுபடுத்திவிட்டதாக கூறினார்.

இதற்கு மொழி, பெற்றோர் பிறந்த தேதி, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவை கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துவிட்டதால், தமிழக மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறினார். 

மக்களவை உறுப்பினர்கள் பதவி காலம் முடிவுறும் நிலையில் கூட்டணிக் கட்சிக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர், எம்பி பதவி கேட்க கூட்டணி கட்சிகளுக்கு உரிமை உள்ளதாகவும்; ஆனால் சீட்டு வழங்குவதா என்பது குறித்து அதிமுக தலைமை தான் கூடி முடிவு எடுக்கும் என்றார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே