ஊழல்வாதிகளை பதவியில் அமரவிடக் கூடாது – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பேச்சு..!!

விழுப்புரம் திருச்சிற்றம்பலத்தில் திருமண மண்டபத்தில் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஈடுபட்டார்.

அப்போது தொழிலாளர்கள் அணியுடான கூட்டத்தில் பேசிய அவர், “தமிழகத்தில் கந்து வட்டி கொடுமை தலை விரித்து ஆடுகிறது. பல கொள்ளைகள் நடைபெறுகிறது. ,

தமிழகம் ஊழல், மணற்கொள்ளை மற்றும் மாநில உரிமைகளை, மத்திய அரசிடம் விட்டுக்கொடுப்பது போன்றவற்றில் முதலிடத்தில் உள்ளது.

வருமான வரி செலுத்தியது தொடர்பாக என்னிடம் வெள்ளை அறிக்கை கேட்கின்றனர். வருமான வரி தொடர்பாக வருமான வரித்துறைதான் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும். திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி என் பணியை சுலபமாக்கிவிட்டனர். 

ஊழல்வாதிகளை பதவியில் அமரவிடக் கூடாது தொண்டு நிறுவனங்களை தமிழக அரசு நிராகரிக்கிறது.

அதிமுக , திமுக நேர்மையாக இருக்கக் மாட்டோம் என்று கூறி மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.

அதை நான் மாற்றுவேன். பிற கட்சியில் இல்லாத மரியாதை, மதிப்பு மக்கள் நீதி மையததில் உள்ளது.

பழிவாங்கும் அரசியலும், பழிபோடும் அரசியலும் மக்கள் நீதி மையத்தில் இல்லை” எனக் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே