அதிமுக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கும் : பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை

மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து அதிமுகவுடன் பேச்சு நடத்தியதாகவும், தங்களுக்கு நிச்சயம் ஒரு இடம் கிடைக்கும் என்று தேமுதிமுக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையே இருப்பதாக தெரிவித்தார்.

ரஜினியுடனான கூட்டனி குறித்த செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த பிரேமலதா, முதலில் அவர் அரசியலுக்கு வரட்டும்  பார்க்கலாம் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே