ட்விட்டரில் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ரஜினிகாந்த் ஜனவரியில் கட்சி துவங்கவுள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளராக ரா.அர்ஜுனமூர்த்தி அவர்களையும், மேற்பார்வையாளராக திரு.தமிழருவி மணியன் அவர்களையும் நியமித்துள்ளார்.

ரஜினிகாந்த் அவர்கள் ஜனவரி மாதம் கட்சி துவங்கவுள்ளதாக இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு கொடுத்திருந்தார்.

இதனால் அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்களின் பேராதரவுடன் நேர்மையான நாணயமான ஆன்மீக அரசியல் உருவாக்குவது நிச்சயம் என ரஜினி கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜனவரியில் தான் ஆரம்பிக்கவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரா.அர்ஜுனமூர்த்தி அவர்களையும், திரு.தமிழருவி மணியன் அவர்களையும் நியமித்துள்ளதாக தற்பொழுது ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இதோ அந்த பதிவு,


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே