மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் தலா 13 பேரும், காங்கிரஸ் சார்பில் 10 பேரும் என 36 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜீத் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான், அமித் தேஷ்முக் உட்பட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
நவாப் மாலிக், ஜிதேந்திர அவ்ஹாத், திலீப் வல்சே-பாட்டீல், தனஜெய் முண்டே, அனில் தேஷ்முக் உட்பட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
முதலமைச்சர் உத்தவ் தாக்ரேவின் மகனும், சிவசேனாவின் இளந்தலைவருமான ஆதித்யா தாக்ரே, மராட்டிய அமைச்சராக பொறுப்பேற்றார்.
அவருக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.