வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் 2வது கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

அப்போது, அரசு சார்பில் அளிக்கப்பட்ட மதிய உணவை ஏற்க மறுத்த விவசாய சங்க பிரதிநிதிகள், தாங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் டில்லி ஹரியானா எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் நேற்று முன்தினம்(டிச.,1) அன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், எந்த முடிவும் எடுக்கப்படாததால், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.

பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு முன்னர், விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், குறைந்தபட்ச ஆதார விலையை மட்டும் சட்டப்பூர்வமாக்குவது என்பது பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது. 

வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் . அதுவரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர்.போராட்டத்தில் பங்கேற்ற விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு, மதிய உணவு வழங்கப்பட்டது.

ஆனால், இதனை ஏற்க மறுத்த அவர்கள், கொண்டு வந்த உணவை சாப்பிட்டனர்.

அரசு எங்களுக்கு அளித்த உணவு மற்றும் தேநீரை நாங்கள் ஏற்கவில்லை. எங்களுக்கான உணவை நாங்களே கொண்டு வந்தோம் என தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே