கடந்த பிப்., 24ம் தேதி புதிய உச்சமாக சவரன் ரூ.33,328க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சில தினங்களாக கணிசமாக குறைய தொடங்கி உள்ளது.
இன்று ஒரே நாளில் சவரன் ரூ.624 குறைந்ததுடன், கடந்த 5 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1,440 சரிந்துள்ளது.
சென்னை தங்கம் – வெள்ளி சந்தையில் 22காரட் ஆபரணத்தங்கத்தின் ஒருகிராம் விலை ரூ.78 குறைந்து ரூ.3,986க்கும்; சவரன் ரூ.624 குறைந்து ரூ.31,888க்கும்; 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.41,890க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது.
ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1.60 காசுகள் குறைந்து ரூ.47.40க்கு விற்பனையாகிறது.