கேரளாவில் ஏற்கனவே இருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மூன்றாவதாக ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸால் கேரளாவைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனையின் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருவருமே சீனாவில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்கள்.

இந்த நிலையில், காசர்கோடு பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் சைலஜா இன்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே