மகாநதி படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற்றார்.
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஐதாராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி டெல்லியில் தேசிய விருது பெற்று திரும்பிய கீர்த்தி சுரேஷூக்கு படக்குழுவினர் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் சிவா, நடிகர் சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கீர்த்தி சுரேஷ்-க்கு ரஜினி கேக் ஊட்டுவது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் அவருக்கு பூங்கொத்து கொடுத்து ரஜினி வாழ்த்து தெரிவித்தார்.