தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் நடிகர் அரவிந்த் சாமி….

நடிகர் அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர் லுக் இன்று வெளியிடப்பட்டதை அடுத்து டிவிட்டரில் தலைவி டிரெண்டாகி வருகிறது.

திரையுலகில் 30 வருடங்களாக நடித்து வரும் அரவிந்த் சாமி, தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஸ்டைலிஸ் வில்லன் என்று ரசிகர்களால் போற்றப்பட்டவர் நடிகர் அரவிந்த் சாமி.

2015-ம் ஆண்டு வெளியான தனி ஒருவன் படத்தில் வில்லனாக இவர் நடித்தது அனைவரையும் கவர்ந்தது.

அந்த படத்திற்கு பிறகு வில்லனும் ஸ்டைலாக இருக்கலாம் என்ற லாஜிக் திரையுலகில் வலம் வர ஆரம்பித்தது.

இந்நிலையில் இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் தலைவி படத்தில் நடிகர் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் அதில் நடித்திருக்கும் கங்கனா ரணாவத்தின் தோற்றம் ஜெயலலிதாவின் தோற்றத்தோடு ஒத்திருக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் ட்விட்டரில் நியூ லுக் புகைப்படங்களை அரவிந்த் சாமி வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் தலைவி படத்தில் எம்.ஜி.ஆராக நடித்த எனது புதிய லுக் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அரவிந்த் சாமியா இது என்று ஆச்சரியத்துடன் கேட்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே