ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக வருகிற 29ம் தேதி பதவியேற்க உள்ளதாக ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.
அந்த மாநிலத்தின் ராஞ்சியில் மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சி அமைக்க 50 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது என்றார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவும், காங்கிரஸ் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும் இணைந்து மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 47 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளதாக அவர் கூறினார்.
வருகிற 29-ஆம் தேதி தமது தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதாக ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.