பல ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அரிதான வளைய சூரிய கிரகணம்!

இன்று முதல் 3 நாட்களுக்கு 6 கிரகங்கள் ஒன்று சேரும் நிலையில் அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தனுசு ராசியில் இன்று முதல் வரும் 27-ஆம் தேதி வரை சூரியன், சந்திரன், குரு, சனி, புதன் மற்றும் கேது ஆகிய 6 கிரகங்கள் ஒன்றாக சேர்ந்து ராகுவின் பார்வையை பெறுவதாகவும்; இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அதற்கு அறிவியல் பூர்வ ஆதாரம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ள பிர்லா கோளரங்க இயக்குனர் சவுந்தரராஜன் சூரியனை சுற்றும் கோள்கள், அவ்வப்போது ஒன்று சேரும் என்றும்; இது பூமியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூறியுள்ளார்.

1962-ம் ஆண்டு பிப்ரவரி 3 முதல் 8 வரை ராகு தவிர மற்ற 8 கிரகங்கள் மகர ராசியில் ஒன்று சேர்ந்தன.

அப்போது உலகம் அழியும் என்று கூறப்பட்ட நிலையில் அப்படி ஏதும் நிகழவில்லை.

ஊட்டி, கோயம்பத்தூர், ஈரோடு, பாலக்காடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் சென்னை உட்பட தென் இந்தியா முழுவதும் ஓரளவு இந்த சூரிய கிரகணத்தை முழுமையாக காணலாம்.

வரும் வியாழக்கிழமை தென்படக்கூடிய கிரகணம் காலை 8 மணி அளவில் துவங்கி, 11:19 மணிக்கு முடிந்துவிடும்.

சரியாக 9:35 மணி அளவில் சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்கும். இந்த முழு கிரகண வடிவம் சுமார் 3 நிமிடங்களுக்கு நிலைபெற்றிருக்கும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

டிசம்பர் 26ம் தேதி ஏற்படக்கூடிய சூரிய கிரகணம் மிகவும் அரிதானது. மீண்டும் இதே போன்றதொரு சூரிய கிரகணம் 2031ம் ஆண்டு மே 16-ம் தேதிதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே