இந்திய பாரம்பரிய உடையணிந்து நோபல் விருதை பெற்ற அபிஜித் பானர்ஜி – எஸ்தர்

ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற நோபல் பரிசு வழங்கும் விழாவில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் இந்திய பாரம்பரிய உடையணிந்து விருதை பெற்றுக்கொண்டனர்.

நடப்பு ஆண்டுக்கான, பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி பொருளியல் நிபுணர்கள் அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டூப்லோ மற்றும் மைக்கேல் கிரீமர் ஆகியோர் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் பொருளாதாரத்திற்கான நேபால் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்டாக்ஹோமில் நடைபெற்றது.

இந்நிலையில், நோபல் பரிசு வழங்கும் விழாவில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி மற்றும் அவரது மனைவி எஸ்தர் இந்திய பாரம்பரிய உடையணிந்து விருதை பெற்றுக்கொண்டனர்.

பின்னணியில் அழகிய இசை ஒலிக்க , நோபல் பரிசுகள் வழங்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே