கல்கி பகவான் ஆசிரமத்தில் 2ஆவது நாளாக ஐ.டி. ரெய்டு

கல்கி பகவான் ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திரா, சென்னை என நாடு முழுவதும் 40 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இதில் இந்திய பணம் 24 கோடி ரூபாயும், 9 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் குறித்தும், தமிழகம் மற்றும் ஆப்ரிக்காவில் அதிக அளவு இடங்கள் வாங்கியதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே