ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ வுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,965 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் திமுக ராஜபாளையம் எம்எல்ஏ தங்க பாண்டியனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

எம்எல்ஏ தங்க பாண்டியன் குடும்பத்தினர் சமீபத்தில் மதுரைக்கு சென்று வந்த நிலையில் எம்எல்ஏ தங்க பாண்டியனின் மனைவி மற்றும் மகன்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.

தற்போது எம்எல்ஏ தங்க பாண்டியனுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை அமைச்சர்கள் உள்பட 17 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே