குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி பெருமிதம்…!

குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து பிரதமர் மோடி மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மசோதாவை ஆதரித்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களுக்கும் தாம் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

மனிதநேயத்தை காப்பதில் இந்தியாவிற்கு உள்ள பாரம்பரிய பெருமைகளை போற்றும் வகையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

மசோதா குறித்து மக்களவையில் எம்.பிக்கள் பல்வேறு விதங்களில் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவாக பதில் அளித்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே