அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்காவிட்டால் நலத்திட்டங்களை செய்து தர முடியாது : சாத்தூர் MLA சர்ச்சை

அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்காவிட்டால் எந்த நல பணிகளையும் செய்து தர முடியாது என சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம், வடகரை, தென்கரை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்களிடம் பேசியவர், ஒரு சில மக்கள் தங்களுக்கு வாக்களிக்காமல் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி கேட்பதாக சாடினார்.

அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் உங்கள் காலுக்கு செருப்பாக இருப்பேன் எனக் கூறிய ராஜவர்மன், இல்லை என்றால் எந்த நல பணிகளையும் செய்து தர முடியாது என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே