அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வருமான வரித்துறை விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது

குட்கா முறைகேடு, சேகர்ரெட்டி விவகாரத்தில் விஜயபாஸ்கருக்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் 2017 ஏப்ரலில் நடந்த வருமான வரித்துறை சோதனையின் அடிப்படையில், 2011-12ம் நிதி ஆண்டிலிருந்து 2018-19ம் ஆண்டு வரை தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளை மறு மதிப்பீடு செய்யும் நடைமுறைகளை வருமான வரித்துறை மேற்கொண்டு வருகிறது.

மீதமுள்ள சேகர் ரெட்டி, சீனிவாசுலு, மாதவ் ராவ் உள்ளிட்ட 7 பேரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க கோரியும், தனக்கு எதிராக திரட்டபட்ட ஆவணங்களின் நகல்களை வழங்க கோரியும் வருமான வரித்துறையிடம் பல முறை மனு அளிக்கப்பட்டது.

ஆனால் அதில் வருமான வரித்துறை முடிவெடுக்காமல் இருப்பதால், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும், ஆவணங்களை வழங்க உத்தரவிடக் கோரியும் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனு தொடர்பாக வருமான வரித்துறை பதிலளிக்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், குட்கா முறைகேடு மற்றும் சேகர் ரெட்டியுடனான தொடர்பு உள்ளிட்ட வழக்குகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

அதில் சேகர் ரெட்டி நடத்திவரும் மணல் குவாரியில் விஜயபாஸ்கருக்கு 20% பங்கு இருந்துள்ளது.

அவர் சுமார் 200 கோடி ரூபாய் வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார். குட்கா முறைகேடு, சேகர் ரெட்டியுடன் தொடர்பு குறித்து இறுதி அறிக்கையில் சேர்க்கப்படும் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

விரைவில், விஜயபாஸ்கர் வரிஏய்ப்பு செய்தது எவ்வளவு என்று வருமானவரித்துறை நோட்டீஸ் வெளியிடும் என்று தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே